கொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்

கொரோனா குழப்பமே இன்னும் முடியாத நிலையில், அதனுடன் கூடுதலாக சேர்ந்து டெங்கு காய்ச்சலும் தாக்கி வருவது மருத்துவர்களை குழுப்பி வருகிறது. இதுவரை உலகமெங்கும் மூன்று கோடி மக்களுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு, பிரத்யேகமான சிகிச்சை என்று எதுவும் இல்லை. மருந்துகளும் இல்லை. ஏற்கனவே வேறு நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளையே  கொடுத்து மருத்துவர்கள் குணப்படுத்துகின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலும் கூடுதலாகப் பரவி வருவது மட்டுமின்றி, கொரோனா பாதித்தவர்களையும் எளிதாக தாக்கி வருவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக, டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப்டம்பர் 14ம் தேதி கொரோனா உறுதியானது. அடுத்த நாள் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் டெங்கு தொற்றும் கூடுதலாக ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.டெல்லியில் 3 நோயாளிகளுக்கு கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டு  இருக்றது. இதுபோல், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுடன் டெங்கு கைகோர்த்துள்ளது.
இது பற்றி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரான ஷெர்வால் கூறுகையில், ‘‘இரண்டு நோய்களுக்குமே நிலையான மருத்துவ நெறிமுறைகளின்படி சிகிச்சை எதுவும் இல்லை. இதனால், கயிற்றில் நடப்பதுபோல் மருத்துவர்களின் நிலை சிக்கலாகி உள்ளது. இவற்றில் எதற்கு முதலில் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பமும் ஏற்படுகிறது,’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here