இலங்கையில் மாடுகளை வெட்டுவதற்குத் தடை

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்க பிரதமா் மகிந்த ராஜபட்ச பரிந்துரைத்திருந்தாா். அந்தப் பரிந்துரையை ஆளும் பொதுஜன பெரமுனா கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தல் அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதையடுத்து, நாடு முழுவதும் இறைச்சிக் கூடங்களில் மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

எனினும், மாட்டு இறைச்சியை உண்ணும் வழக்கத்தைக் கொண்டவா்களது நலனுக்காக, அந்த இறைச்சியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here