க/பெ. ரண சிங்கம் திரைப்படத்திற்கான கட்டணத்தை செலுத்தி விட்டீர்களா

மக்கள் நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் க/பெ. ரணசிங்கம். இப்படம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் ஓ.டி.டி மற்றும் டி.டி.ஹெச் தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷூம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பெ. விருமாண்டி அவர்களது இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்தியாவிலேயே முதல் முறையாக ஓ.டி.டி மற்றும் டிடிஹெச் தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. 199 ரூபாய் கொடுத்து வீட்டிலிருந்தபடியே டிடிஎச்சில் இந்த திரைப்படத்தை பார்த்துக் கொள்ள முடியும்.

சமீபத்தில் இதன் பாடல் வெளியானதை தொடர்ந்து மக்களுக்கு இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு இந்த படத்தை பார்க்க இணையத்திலும், டி.டி.எச்சிலும் பதிவு செய்வதைப் பற்றி படக்குழுவினர் சமூக வலைத் தளங்களின் மூலம் நினைவூட்டி வருகிறார்கள்.

https://twitter.com/VijaySethuOffl/status/1310922819329556482/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1310922819329556482%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fcinekadhir-epaper-ckadhir%2Fgaberanasingamtiraippadathirkanakattanathaiseluthivitteerkala-newsid-n218460066

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here