சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல ஆண்டுகளாக வரி கட்டாமல் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் முடியலங்கராத்திற்கு செலவு செய்துள்ளதாக கூறப்படும் தொகை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கடந்த 10 ஆண்டுகளாக வரி கட்டாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வருமானவரியாக 750 டாலர்கள் மட்டுமே ட்ரம்ப் கட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது வரவு செலவுகள் குறித்து அவர் சமர்பித்துள்ள அறிக்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிகை அலங்காரம் செய்த செலவு 55,000 பவுண்டுகள் என தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு முடிக்கு செலவு செய்யும் அளவு கூட வருமான வரி செலுத்தாமல் ட்ரம்ப் ஏமாற்றியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன.