சட்டவிரோத உறைந்த கோழி இறைச்சி இறக்குமதி வழக்கு: 7 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

கோத்தா கினபாலு :

பாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சட்டவிரோதமாக உறைந்த கோழி இறைச்சியை இறக்குமதி செய்த விவகாரத்தில், 4 அரசு ஊழியர்கள் உட்பட 7 பேர் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.

சபா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் உறைந்த கோழி இறைச்சிப் பொதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் இன்றி உள்ளே அனுமதிக்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகக் கடல் வழியே கொண்டுவரப்படும் உறைந்த கோழி இறைச்சிப் பொதிகளைத் துறைமுகச் சோதனைகளில் இருந்து தப்ப வைக்க அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here