பெட்டாலிங் வட்டாரம் பிஜே செக்ஷன் 13 ஜாலான் புரொபசர் கூ கா கிம் என்ற இடத்தில் இருக்கும் சிம்பெனி ஸ்குயர் என்ற கட்டடத்தில் இயங்கி வந்த இணையத் தள சூதாட்ட மையத்தை பெட்டாலிங் மாவட்ட போலீசார் வளைத்து பிடித்தனர்.
இன்று மாலை 6.30 மணிக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 26 ஆண்களையும் 11 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 2,500 வெள்ளிக்கு மேல் ஊதியம் பெற்று வந்ததாகவும் சம்பந்தப்பட்ட இந்த இடத்தில் ஒரு மாதமாக அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் தற்பொழுது செயல்பட்டு வரும் இந்த இடத்திற்கு மாதந்தோறும் 40,000 வெள்ளி வாடகை செலுத்தி வருவதாகவும் பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி தெரிவித்தார். மேலும் அவர்களின் இணையத் தளத்தில் 500க்கும் மேற்பட்ட சூதாட்ட விளையாட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்தக் கும்பல் 2 ஆண்டுகளுக்கு மேல் பெட்டாலிங் வட்டாரத்தில் இயங்கி வருவதாகவும் தற்பொழுது இந்த இணையத் தள சூதாட்ட மையத்தின் உரிமையாளரான 40 வயது மதிக்கதக்க ஆடவரை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 37 பேரையும் மேல் விசாரணைக்காக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.