கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வழக்கமான புரட்டாசி சனி பூஜை

கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நாளை 3.10.2020 வழக்கம் போல் நடைபெறும் என்று ஆலயத் தலைவர் சங்கரத்னா சித. ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றினால் பக்தர்கள் பலர் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு கோ பூஜை, திருமஞ்சனம், பஜனை ஆகியவை நடைபெறுமா என்று தொலைபேசி வழி அழைத்து கேட்கின்றனர்.

ஆலயத்தில் கடந்த இரண்டு வாரம் நடைபெற்றது போல் இவ்வாரமும் பூஜைகள் நடைபெறும் என்றும் அதே வேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வருமாறும் ஆலயத்தலைவர் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் 3ஆவது வார புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை பால் குட ஊர்வலமும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here