பிரபலத்தின் மரணத்தை வைத்து சம்பாத்தியமா ?

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி சில நாட்கள் முன் உடல்நலக்குறைவால் காலமானார். தனது ஹாஸ்பிடல் பில் கட்ட முடியாமல் தடுமாறிய போது அவருக்கு எந்த வித உதவியும் விஜய் டிவி சார்பாக செய்யவில்லை என்னும் தகவல் வெளியானது

நடிகர் வடிவேல் பாலாஜி பற்றிய செய்தி அனைத்துக் கலைஞர்களையும் அவரது ரசிகர்களையும் மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பெரிதும் கெட்ட பெயர் உருவானது.

பாலாஜி மரணத்திற்கு பின்பு வழக்கம்போல் அதைவைத்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலை பயன்படுத்தும் விஜய் டிவி, இதற்கிடையில் மக்களை ஈர்ப்பதற்காக ஒரு சில வேலைகளை செய்து வருகிறது.
சமீபத்தில் வடிவேல் பாலாஜி இறந்ததற்கு கவலை தெரிவித்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளதாகவும் அதன் மூலம் மக்களின் செண்டிமெண்டை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மருத்துவ செலவுக்கு உதவ முடியவில்லை, ஆனால் அவருடைய சாவை வைத்து நன்றாக காசு பார்க்கிறார்கள் என பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியின் மீதான மரியாதை மற்றும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்து கொண்டுதான் வருகிறது என்பது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here