மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடாச்சலம், பிரபுவை தனது வீட்டுக்கு அழைத்து மதுவாங்கி கொடுத்துள்ளார்.

மதுவை அருந்திய பிரபு போதையில் இருந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடாச்சலம் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரபு பிணத்தை அந்த பகுதியில் போட்டு விட்டு வெங்கடாச்சலம் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர். கொலை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து பிரபுவின் தாயார் வசந்தா மேலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here