வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் வேட்பாளர்கள் இடையேயான முதல் நேரடி விவாதம், ஓஹியோ மாகாணம், கிளீவ்லாண்டில் நடந்தது.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,’ என்றும், ‘உலக வெப்பமயமாதலுக்கு அமெரிக்கா 15 சதவீதம் பொறுப்பு’ எனவும் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான தரவுகளை அளிக்கவில்லை. அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம்,’ என கூறியது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை நட்பு நாடு என கூறிவிட்டு மேடையில் டிரம்ப் இந்தியாவை பற்றி இப்படி பேசியுள்ளது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.