பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம்

பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியிலிருந்து கிரெஸ்னோதேர் எனும் பகுதிக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலையில் இவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் பெண் புகைப்படம் இருப்பதாகவும் இவர் பார்ப்பதற்கு ஆண் போலத் தோற்றமளித்தாலும் இவரை விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர் பலமுறை நான் பெண்தான் வீராங்கனை எனக் கூறியும் விமானத்தினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ஆள் மாறாட்டம்செய்து வந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளா.ர் இவரை பற்றி தெரிந்த சிலர் இவர் பெண்தான் என கூறியதும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட நேரமாக பெண் என்பதற்காக அவர் பல்வேறு நிரூபனைகள் செய்து காட்ட வேண்டியதாக இருந்ததாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் வீராங்கனை அன்னா துரேவா அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here