கட்டாய உழைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளில் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் பி.டி.யின் விளக்கத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று மலேசியா நம்புகிறது.
இது அமெரிக்க சுங்க , எல்லை பாதுகாப்பு (சிபிபி) நிறுவனத்திடமிருந்து பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய தூண்டியதாகும்..
பிரதமர் செயலகத்தின் (பொருளாதாரம்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஸ்தபா முகமது, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று குறிப்பிட்டார்.
உற்பத்தித் துறையும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறது. இதற்கான ஒரு விளக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் சிக்கலின் ஒரு பகுதி தீர்க்கப்பட்டது.
எனவே, இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, எஃப்ஜிவி ஹோல்டிங்ஸின் தயாரிப்புகளை அதன் சந்தையில் மீண்டும் நுழைய அனுமதிக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இங்குள்ள ரூமா பங்சா லார்க்கினில் குத்தகைதாரர்களை சந்திக்கும் போது முஸ்தபா இதனைக் கூறினார்.