எண்ணிக்கை 3.53 கோடியாக உயர்வு

கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடியாக உயந்துள்ளது.

முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனாக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 கோடியே 53 லட்சத்து 88 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 77 லட்சத்து 36 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 401 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.66 கோடியாக அதிகரித்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 76,36,912
இந்தியா – 66,22,180
பிரேசில் – 49,15,289
ரஷியா – 12,15,001
கொலம்பியா – 8,55,052
பெரு – 8,28,169
ஸ்பெயின் – 8,10,807
அர்ஜென்டினா – 7,78,486
மெக்சிகோ – 7,61,665
தென்னாப்பிரிக்கா – 6,81,289
பிரான்ஸ் – 6,19,190
இங்கிலாந்து – 5,02,978
ஈரான் – 4,71,772
சிலி – 4,70,179
ஈராக் – 3,79,141
பங்களாதேஷ் – 3,68,690
சவுதி அரேபியா – 3,36,387
இத்தாலி – 3,25,329
துருக்கி – 3,24,443
பிலிப்பைன்ஸ் – 3,22,497
பாகிஸ்தான் – 3,14,616

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here