மெக்காவுக்கு உம்ரா யாத்திரை செல்ல அனுமதி

சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் மெக்காவிற்கு உம்ரா யாத்திரை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. உம்ரா யாத்திரை என்பது மெக்கா, மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரையாகும். இஸ்லாமியர்கள் ஆண்டு முழுவதும் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்சில் உம்ரா யாத்திரை செல்வதற்கு தடை விதித்தது. இந்நிலையில், சவுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக இஸ்லாமியர்களின் உம்ரா யாத்திரைக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, ஒரு நாளைக்கு 6 ஆயிரம் இஸ்லாமியர்கள் மட்டுமே மெக்கா புனித தலத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்கள் மட்டுமே மசூதிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 18ம் தேதி முதல் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதிகப்பட்சமாக 40 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் நவ.1 முதல் செல்லலாம்: வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் நவம்பர் 1ம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள். யாத்திரிகர்கள் எண்ணிக்கையானது 20 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும். இதற்கு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here