யூனிஸ்ஸா பல்கலைக்ழகம் மூன்று தினங்களுக்கு மூடல்

சுல்தான் ஜைனல் ஆபிடின் ( யுனிஸ்ஸா )பலகலைகழகத்தின் ஊழியர்களில் ஒருவர் கோவிட் -19 க்கு ஆளானதால் அப்பல்கலைக்கழகம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹசான் பாஸ்ரி அவாங் மாட் தஹான் தெரிவித்தார்.

மூடல் என்பது  அதன் மூன்று வளாகங்களையும் உள்ளடக்கியது, அதாவது கோங் பாடாக் வளாகம் (கோலா நெரஸ்), மருத்துவ வளாகம் (கோல திரெங்கானு) பெசூட் வளாகம் (பெசூட்) ஆகியவையாகும்.

மூடலின் போது, ​​மாணவர்கள் ,பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆன்லைனில் கற்பித்தல், கற்றல் செயல்முறை மேற்கொள்ளப்படும். ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, விரிவான கிருமிநாசினி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து அக்டோபர் 5 முதல் 7 வரை பணியாற்றுவதாக யூனிஸ்ஸா முடிவு செய்துள்ளது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

துணைவேந்தரின் ஒப்புதலுக்கு உட்பட்டு பாதுகாப்பு, சுகாதாரம், நிதி, மாணவர் விவகாரங்கள் , குடியிருப்பு கல்லூரிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாளர்கள் தவிர, அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் இந்த உத்தரவு உள்ளடக்கியுள்ளது என்றார்.

கோவிட் -19 நேர்மறையாளர் கோலாலம்பூரிலிருந்து தெரெங்கானுக்கு விமானத்தில் பயணம் செய்தவர். அதே விமானத்தில் சபாவிலிருந்து திரும்பி வந்தவருடன் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் ஹசான் பாஸ்ரி தெரிவித்துள்ளார்.

வழக்கைத் தொடர்ந்து, 14 யுனிஸ்ஸா பணியாளர்கள் நோயாளியின் நெருங்கிய தொடர்புகளாகக் கண்டறியப்பட்டனர், பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) உத்தரவுகளால் கண்காணிப்பு  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here