விஞ்ஞானிகளை கௌரவிக்கும் நோபல் விருது-இன்று அறிவிப்பு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. உலகில் எந்த மூலையிலும் இருக்கும் விஞ்ஞானிகளையும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், உலகிற்கு பயனிளிக்கும் சிறந்த கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதே போல நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி5 நாள் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் முதல்நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.அதே போல நாளை இயற்பியலுக்கும்,அக்.7ந்தேதி வேதியல் துறைக்கும், அக்.8ல் இலக்கியத்துறைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளன. அக்.9ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக்.10ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here