விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்டீரியர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றுளதாம். விரைவில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் காஜல் இதுகுறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிடுவார் என நம்பலாம்.