நாகர்ஜுனா அக்கினேனியில் மூத்த மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை கல்யாணம் செய்து வாழ்ந்து வருகிறார் தற்போது இளைய மகனான அகில் அக்கினேனி படங்களில் கவனம் செலுத்துகிறார். நடிகர் அகில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டியுடன் புதிய திரைப்படத்தை சமீபத்தில் அறிவித்திருந்தார்.
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு புகழ்பெற்ற சுரேந்தர் ரெட்டி, வக்காந்தம் வம்சியின் ஒரு சூப்பர் கதையில் அகிலை இயக்கப் போகிறார். அகில் அக்கினேனி மற்றும் சுரேந்தர் ரெட்டி கூட்டணியை ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர் மற்றும் சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.
அகில் அக்கினேனியின் புதிய தோற்றத்தில் காட்டத் தயாராகி வருகிறார். இப்போது இப்படத்தில் பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா அகில் அக்கினேனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்மிகா மந்தனா, விரைவில் ‘ரெமோ’ புகழ் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் . ராஷ்மிகா மந்தனா கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சாரிலேரு நீக்கேவரு’ படத்தில் காணப்பட்டர். சமந்தாவை போன்று ஜோடி போட்டு பிறகு நிஜ வழக்கை ஜோடியாக மறுவாரா என்ற கேள்வி ரஷ்மிக்கா எடுத்து கொண்ட போடோட்களே வெளிப்படுத்துகிறது.