ஜோகூரின் புதிய சுகாதார இயக்குநராக டாக்டர் மொஹ்தார் நியமனம்

சுல்தானா அமினா மருத்துவமனை இயக்குனர், டாக்டர் மொஹ்தர் புங்குட்@அஹ்மட் ஜோகூர் மாநிலத்தின் புதிய சுகாதார இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 26) மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் அறிவித்தார். மேலும் அவரது நியாமானம் எதிர்வரும் மே 2 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏப்ரல் 11 அன்று கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ டாக்டர் அமன் ராபுவுக்கு பதிலாக டாக்டர் மோஹ்தார் நியமிக்கப்படுவார் என்றும் லிங் அந்தப் பதிவில் கூறினார்.

” 55 வயதான டாக்டர் மோஹ்தார், இம்மாத இறுதி வரை எச்எஸ்ஏ இயக்குநராகப் பணியாற்றுவார் என்றும், டாக்டர் மோஹ்தரின் புதிய நியமனத்திற்கு மாநில அரசு வாழ்த்துகிறது.

“அவரது தலைமையால் ஜோகூரில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும், மாநிலம் மேலும் முன்னேறவும், சிறந்து விளங்கவும் அவர் சேவையாற்றுவார் என்றும் தான் நம்புவதாகவும்” லிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here