தலைவருக்கு தில்ல பார்த்தீர்களா.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதை ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா கடந்த 2009 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் 500 அடி பிரிட்ஜ் மீது இருந்து டூப் இல்லாமல் கீழே குதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

நடிகர் சூர்யா இந்த ஸ்டண்ட் குறித்துப் பேசிய காட்சிகளும் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. இந்த வீடியோ ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here