துணை அதிபர் வேட்பாளர்கள் இன்று நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஏற்கனவே அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்யவுள்ளனர்.

துணை அதிபர் வேட்பாளர்களான மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர்கள் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்ய உள்ளனர். சால்ட் லேக்கில் உள்ள உட்டா பல்கலைக் கழகத்தில் இந்த விவாதம் நடைபெற உள்ளது என்பதும் இந்த நேருக்கு நேர் விவாதம் பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறது என்படும் குறிப்பிடத்தக்கது

ப்ளக்சி கிளாஸ் ஸ்க்ரீன் பின்புறம் அமர்ந்து இருவரும் விவாதம் செய்கின்றனர் என்றும், சாதனைகள் வாக்குறுதிகள் பற்றி விவாதம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மைக் பென்ஸ் அவர்கள் கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம் என்றும், அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் கூறினார். ஆனால் கமலா ஹாரீஸ் இதற்கு பதிலளிக்கும்போது, ‘அதிபர் ட்ரம்பின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர் என்றும், கொரோனாவிற்கு நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here