சூட் கேஸில் பெண்ணின் சடலம் இருவர் தடுத்து வைப்பு

சிபு ஜாலான் அமானில், சூட்கேஸில் ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த விசாரணைக்கு உதவ இரண்டு சந்தேக நபர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஏழு நாள் தடுப்பானை உத்தரவைப்  பிறப்பித்தது.

மாஜிஸ்திரேட் முகமட் ஃபைசல் சே சாட், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117  இன் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபர்கள், ஒரு ஆண் , ஒரு பெண் 38, இருவரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் ஜாலான் டோங் சாங்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

சூட்கேஸுக்குள் இருந்த பெண் இடுப்புக் கீழே உடல் முழுமையாக உடையணிந்திருந்தாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி ஸ்டான்லி ஜொனதன் ரிங்கிட் தெரிவித்தார்.  காலை 6.30 மணியளவில் ஒரு வழிப்போக்கரால் இந்த சூட் கேஸ் (பயணப்பெட்டி) கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது முகம், கழுத்துப்பகுதியில் காயங்கள் இருந்தன, உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் பேராக் நகரைச் சேர்ந்த 37 வயதான ஹெங் மியாவ் லிம் என அடையாளம் காணப்பட்டதாக  போலீசார் அவர் தெரிவித்தனர்.

உடலுடன் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் தனக்கு 16 வயதான ஒரு மகள் இருப்பதாகவும், அவர் தனது குடும்பத்தினருடன் பேராக் நகரில் வசித்து வருவதாகவும் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் அவரது மகளுக்கு எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here