பஞ்சாபில் 15.99 லட்சம் டன் நெல் கொள்முதல்

நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில், முதல் 13 நாள்களில் மட்டும் பஞ்சாபில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15.99 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கடந்த 8-ஆம் தேதி நிலவரப்படி, 13 நாள்களில் முன்னெப்போதும் இல்லாத அளவாக பஞ்சாபில் இருந்து 15.99 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1.76 லட்சம் டன் நெல்லுடன் ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகம்.

அனைத்து மாநிலங்களில் இருந்தும் 26.3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 17.7 லட்சம் டன் நெல்லின் அளவைவிட 48% கூடுதலாகும். இதில் பஞ்சாபில் இருந்தே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 9,517 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 320 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,868-ஆகவும், சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,888-ஆகவும் மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here