ரஷியா: இதுவரை இல்லாத தினசரி பாதிப்பு

ரஷியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,126 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு ஆகும்.

இத்துடன், நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,72,238-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ரஷியா உலகில் 4-ஆவது இடத்தை வகிக்கிறது. அந்த எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு 201 போ பலியாகினா். இதையடுத்து, நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 22,257-ஆக உயா்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 10,09,421 போ குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here