மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் பகிர்வு

தீபகற்ப மலேசியாவிலிருந்து இரண்டு மருத்துவக்கூட்டத்திலிருந்து ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களான (எம்.எல்.டி) ரேடியோகிராஃபர்களை சுகாதார அமைச்சகம் (எம்.ஓ.எச்) அணிதிரட்டியுள்ளது.

அரச மலேசிய விமானப்படையின்  சார்லி விமானத்தில் அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை சபாவுக்கு அனுப்பப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அவர்கள் பல சுகாதார, மருத்துவமனைகளில் இருந்து பணியாற்றுகிறார்கள்.  அதாவது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎம்ஆர்), சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனை, ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனை, செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை, புத்ராஜயா மருத்துவமனை, தேசிய புற்றுநோய் நிறுவனம், கோலாலம்பூர் மருத்துவமனைகளாகும் என்று  தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவில் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து முன்னணி ஊழியர்களும் தாவாவ் மருத்துவமனை, சம்பூர்ணா மருத்துவமனை , லஹாட் டத்து மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

முன்னதாக அக்டோபர் 3 முதல் 5 வரை, தேசிய இரத்த மையம், கோலாலம்பூர் மருத்துவமனை, பினாங்கு மருத்துவமனை, சரவாக் பொது மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை ஆகிய ஐந்தும் மாநிலத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here