நடிகர் விஜய்யுடன் நடித்த இயக்குனர் சிறுத்தை சிவா

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர், இவரது திரைப்படங்களுக்கு இந்திய அளவில் செம்ம வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்றதுடன், 300 கோடிக்கும் வசூல் பண்ணியது.

அதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார், இந்த படமும் விரைவில் ரிலீசாகும் என நம்பப்படுகிறது. இப்படியிருக்க விஜய் நடிப்பில் கடந்த 2001 ம் ஆண்டு வெளியான திரைப்படம் பத்ரி. இந்த படத்தில் தல அஜித்தை வைத்து 4 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவாவும் நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . தொடர்ந்த அப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஒரு காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here