உண்மை புரியாமல் உயிர் நண்பனை கொன்ற கொடூரம்!

தன் தங்கையுடன் நட்போடு பழகிய உயிர் நண்பனை இளைஞர் ஒருவர் உண்மை தெரியாமல் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மாணவர் ராகுல் தனது நண்பனின் தங்கையோடு நட்பாக பழகியுள்ளார். ஆனால் சிலர் இருவரும் காதலிப்பதாக நினைத்தார்கள். இதனால் பெண்ணின் அண்ணன், தன் தங்கையுடன் பேசாதே, வெளியே சுத்தாதே என பலமுறை கூறினான்.

ஆனால் இருவரும் நட்புடன் மட்டுமே பழகி வருவதாகவும், காதல் எல்லாம் இல்லை என்று ராகுல் தனது நண்பனிடம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதனை பெண்ணின் அண்ணன் ஏற்கவில்லை.

இருவரும் தொடர்ந்து பேசிவருவதை அறிந்த ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் டெல்லி நந்தா பகுதிக்கு ராகுலை அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினார். பின்னர் கொலை செய்து சடலத்தை அங்கே போட்டுவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் ராகுல் கொலை தொடர்பாக பெண்ணின் சகோரர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here