“வலிமை படம்”-யுவன் சங்கர் ராஜா

தல அஜித் நடித்து வரும் வலிமை படம் பற்றி யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தைப் பற்றிய அப்டேட் ஏதாவது வெளியாகாதா என நீண்ட நாட்களாக வைட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு செம மாஸாக வெறித்தனமாக இருக்கும் என பதிலளித்துள்ளார்.

அதேபோல் படத்தின் பிஜிஎம், பாடல்கள் போன்றவைகளும் வெறித்தனமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here