“வர்த்தகப் போரில் சீனாவை விட அமெரிக்காவிற்கே அதிக ஆதிக்கம் உள்ளது”: டொனால்ட் டிரம்ப்!

கோலாலம்பூர்:

சீனாவை விட, அமெரிக்காவிற்கே வர்த்தகப் போரில் அதிக ஆதிக்கம் உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அரிதான பூமிப் பொருட்கள் (rare earths) உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம் இருந்தாலும், அமெரிக்காவின் விமானப் பாகங்கள் இதற்கு ஒரு நல்ல மாற்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு தொடக்கத்தில், சீனா, அமெரிக்காவிற்கு அரிதான பூமிப் பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தி, தனது 90% கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியது. ஆனால், வரிப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஏற்றுமதி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, போயிங் (Boeing) விமானத்தின் பாகங்களை நிறுத்தி வைத்தால், சீனாவைப் பெரிய அளவில் பாதிக்கும். ஆனால், தான் சீன அதிபர் சி ஜின்பிங்குடன் (Xi Jinping) நல்லுறவைப் பேணுவதால், அதைச் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில், சீனாவுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

200% வரை வரி விதிப்பது, அமெரிக்காவின் வலுவான பேரம்பேசும் கருவி என்று வலியுறுத்திய அவர், அமெரிக்கா, தனது சொந்த அரிதான பூமிப் பொருட்கள் விநியோகத்தை உருவாக்குவதால், இந்த வர்த்தகப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here