நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் ஆகப்போகிறது என அதிகாரபூர்வமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.
மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற இருப்பதாகவும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே இத்திருமணத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மும்பையில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வீட்டிலேயே நாடாகும் இ இந்த திருமணத்தில் மிகக் குறைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.





















