ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி வரை ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், பிப்ரவரி முதல் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாகவும் அதற்கு முன்னர் 50 பிரச்சார வீடியோக்களை அவர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயதசமியன்று அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் அன்றைய தினம் ஒரு வீடியோ வெளியாகும் என்றும், அரசியல் கட்சி தொடங்கியவுடன் தினமும் ஒரு வீடியோ என்ற வகையில் 50 வீடியோக்கள் தினசரி சமூக வலைதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களில் தனது கட்சியின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள், கடந்த காலத்தில் நடந்த தவறுகள் ஆகியவை குறித்து ரஜினி தனது பாணியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி ரசிகர்களிடையே இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.