கோவிட்-19: 74 அதிகாரிகள், 36 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி

கோலாலம்பூர்: மொத்தம் 113 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக புக்கிட் அமான் மேலாண்மைத் துறை இயக்குநர் டத்தோ ராம்லி தின் தெரிவித்தார்.

கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட  ஏழு மூத்த அதிகாரிகள், 72 பணியாளர்கள், மூன்று பொதுமக்கள் மற்றும் 31 குடும்ப உறுப்பினர்கள் என்று வெள்ளிக்கிழமை (அக். 16) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

நேர்மறையான சம்பவங்கள் தவிர 2,058 பணியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் 354 மூத்த அதிகாரிகள், 1,296 பணியாளர்கள், 73 பொதுமக்கள் மற்றும் 335 குடும்ப உறுப்பினர்கள் என்று அவர் கூறினார். ராம்லி வியாழக்கிழமை தொடங்கி வீட்டிலேயே தனிமைப்படுத்தலைத் தொடங்கினார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here