பினாங்கு DVS: மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை

ஜார்ஜ் டவுன்: பினாங்கின் பத்து லஞ்சாங் பகுதியில் நேற்று, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நாயை இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கால்நடை சேவைகள் துறை (DVS) விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்த புகாரைப் பெற்றதை பினாங்கு DVS-இன் இயக்குனர் டாக்டர் சாய்ரா பானு முகமது ரெஜாப் உறுதிப்படுத்தினார். பினாங்கு DVS இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், விலங்குகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேவிட் யிம் கூறுகையில், இச்சம்பவத்தைக் நேரில் கண்ட பெண் ஒருவர் அந்த இருவரையும் தடுத்து நிறுத்தி நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவர்கள் அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்காமல் நாயை தொடர்ந்து இழுத்துச் சென்றுவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பெண் DVS-இடம் புகார் அளித்ததாகவும், இச்சம்பவம் பதிவாகியிருக்கலாம் எனக் கருதப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். கருப்பு நிறத்திலான அந்த நாய் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது; அது சம்பவ இடத்திலேயே விட்டுச் செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். விலங்குகள் மீதான கொடுமை இதில் அடங்கியிருந்தால், அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here