அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள புதிய தமிழ்ப் படம்!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புத்தம் புதுக் காலை என்கிற புதிய தமிழ்ப் படம் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் என தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து புத்தம் புதுக் காலை என்கிற படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்காக இயக்கியுள்ளார்கள்.

கொரோனா காலத்தில் நடைபெறும் ஐந்து கதைகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டவை.

இளமை இதோ இதோ என்கிற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜெயராம், காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

அவரும் நானும்/அவளும் நானும் கதையை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரிது வர்மா போன்றோர் நடித்துள்ளார்கள்.

காஃபி எனிஒன் கதையை சுஹாசினி மணி ரத்னம் இயக்கியுள்ளார். சுஹாசினி, அனு ஹாசன், ஷ்ருதி ஹாசன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ரீயூனியன் கதையை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, லீலா சாம்சன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

மிராகிள் கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, முத்து குமார் போன்றோர் நடித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here