நவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவிலில், நவராத்திரி பெருவிழா, இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.தினமும் மாலை, 6:30 மணிக்கு, அம்பிகையின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகள் நடக்கின்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களில், கொலு வீற்றிருக்கும் கற்பகாம்பாளுக்கு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், திருமுறை பாடல்களோடு தீபாராதனையும் நடைபெறவுள்ளது.நவராத்திரி கலை விழா, தினமும் மாலை, 6:30 மணி முதல், 7:30 மணி வரை, ‘ஆன்லைன்’ மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதை, https://wwwyou tube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற, ‘யு டியூப் சேனல்’ மூலம் நேரலையில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here