(News By: Reporter Malini)
மலாக்கா,
ஜாசின் 16, கம்போங் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் பக்தர்களின் நலன் காக்கும் தெய்வமாக இங்கு அருள் காட்சி தருகிறார்.
தன்னை நாடி வருபவர்களை அரவணைத்து இன்னல் போக்கும் கலியுக அன்னையாக விளங்கும் அம்பாளுக்கு எதிர் வரும் 14, 15 ஜூன் 2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 52 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
சுமார் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் நாடு தழுவிய நிலையிலிருந்து திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
ஆலய ஸ்தாபகர் அமரர் கருப்பையா அருளாசியுடன் காளி உபாசகர் மகா லிங்கம் சாஸ்திரிகளின் கண்காணிப்பில் இவ்வாலயம் தற்பொழுது சிறப்பாக இயங்கி வருகிறது.
சகல சக்திகளுடைய காளியம்மன் பல அதிசயங்களை புரிந்ததன் பலனாகவே, சிற்றூரான ஜாசின் கிராமத்தில் இத்திருக்கோவில் உருவானது என்பதும் கம்போங் இந்தியாவில் குடிகொண்டுள்ள கரு காளி அம்பிகை பற்பல உன்னதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதும் மக்களின் நம்பிக்கையாக விளங்குகிறது.
இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின், குடும்பப் பிரச்சனை, தொழில், வீழ்ச்சி, , நோய், பிணி , மாந்திரக சிக்கல்கள் அனைத்தும் நீக்கி அருள் புரியும் வல்லமை பொருந்திய மகா காளியாக இந்த தாய் திகழ்கிறாள்.
ஆலயத்தின் தலைவரும் , காளி உபாசகருமான க. மகாலிங்கம் முத்துப் போட்டு அருள் வாக்கு சொல்வதின் வழி பக்தர்களின் குறைகள் நீக்கப்பட்டு வருகிறது. பிரச்சனைகளுடன் வருபவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று ஆலயப் பிராகாரத்தை தீச்சட்டி ஏந்தி சுற்றி வந்து தங்கள் மனகுமறல்களை கருமகா காளியின் முறையீட்டு வேண்டுக் கொள்வது இவ்வாலயத்தில் தொன்று தொட்டு செயல்பட்டு வரும் சிறப்பு பூஜையாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் அதிகரித்து வருவதாகவும் வேண்டி எடுக்கப்படும் தீச்சட்டி பிரார்த்தனை அடுத்த அமாவாசைக்குள் தீர்வு கண்டு விடும் என நம்பபடுகிறது.
ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பிரத்தியேகமாக நடைபெறவுள்ளது. 13.6.2025 வெள்ளிக்கிழமை மூகூர்த்த கால் ஊணுதல் , ஹோம பூஜைகள் தொடங்கும்.
14.6.2025 சனிக்கிழமை மாலை 4.30 க்கு விக்னேஸ்வர பூஜை ஹோமம் , இரவு 7.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பலி பூஜைக்குப் பின் இரவு 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனை பால் குடம்,காவடி, மற்றும் நேர்த்தி கடன் செலுத்தும் வைபவம் ஆற்றங்கரையிலிருந்து இரத ஊர்வலத்துடன் இனிதே தொடங்கும்.
திருவிழா அன்று 15.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆலய நித்திய பூஜைகள் தொடங்கி . காலை 10..00 மணிக்கு வேண்டுதல் பூஜை, தீச்சட்டி ஏந்தி வைபவம் நடைபெற்று பிற்பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையும் 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.





















