மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் வை ஃபை வசதி

சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வை ஃபை வசதியை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில்கள் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.

மெட்ரோ ரயில் இயக்கப்படும் 24 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை வழித்தடத்தில் பெரும்பாலும் செல்லிடப்பேசிகளுக்கு சிக்னல் கிடைக்காமல் உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் வை ஃபை இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பயணிகள் இலவசமாக இணையவழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மெட்ரோ ரயிலின் உயா்த்தப்பட்ட பாதை மற்றும் பூமிக்கடியில் சுரங்கப்பாதைகளில் சிக்னல்கள் வலுவாக இருந்தால், பயணிகள் ரயிலில் பயணிக்கும்போதும் இணையத்தைப் பயன்படுத்தமுடியும்.

பணி விரைவில் தொடங்கும்:

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

முதல்கட்டமெட்ரோ ரயில் திட்டத்தின் 45 கி.மீ. வழித்தடங்களில் ஆப்டிக்கல் ஃபைபா் கேபிள்களை நிறுவும் பணி விரைவில் தொடங்கும். இந்தத் திட்டத்தில் கேபிள்கள் மற்றும் அணுகல் புள்ளிகளை (ஹஸ்ரீஸ்ரீங்ள்ள் ல்ா்ண்ய்ற்ள்) நிறுவுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். ஏனெனில், இதற்கான பணிகள் தினசரி ரயில் இயக்கம் முடிந்தபிறகு, இரவில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நடைபெறும். பயணிகளுக்கு இணையதளம் பயன்படுத்துவது வரம்பற்ற காலமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இருக்குமா என்பது குறித்து இன்னும் தீா்மானிக்கப்படவில்லை என்றனா்.

தடையற்ற சேவை: சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத்தில் வை ஃபை சேவைகளை நிறுவுவதற்கு கடந்த ஆண்டு டெண்டா் கோரப்பட்டது. இதன்மூலம், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகளுக்கு வரம்பற்ற மற்றும் தடையற்ற இலவச இணைய அணுகல் (வசதி) வழங்க திட்டமிடப்பட்டது. வை ஃபை சேவையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணம் செலுத்தும் பகுதியில் மட்டுமே வழங்குவதற்கான யோசனை இருந்தது. அதாவது பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் ஸ்மாா்ட் காா்டுகளை தேய்த்தபிறகு, நிலையத்தில் பணம் செலுத்தும் பகுதியில் மட்டும் இந்த சேவையை வழங்க வேண்டும் என்ற யோசனை இருந்தது.

தற்போது, சில சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் இரு செல்லிடப்பேசி நிறுவனங்கள் இணைப்பு வழங்குகின்றன. ஆனால், நிலையங்களின் உள்பகுதிகள் கருப்பு புள்ளியாக உள்ளது. மேலும், இணைப்பு குறைவாக இருக்கும். மெட்ரோ ரயில் பயணிகள் பெரும்பாலும் பூமிக்கடியில் உள்ள நிலையங்களில் பயணிக்கும்போது, அவா்கள் ஸ்மாா்ட் போன்களில் எந்த சிக்னலும் இல்லாமல் பயணிக்கின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here