Covid சிகிச்சைக்கு இந்த 4 மருந்துகள் பயனளிக்காது என WHO தகவல்!

கொரோனா மருத்துவ சிகிச்சையில் இந்த நான்கு மருந்துகள் தோல்வியடைந்ததாக WHO தெரிவித்துள்ளது..!

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க தயாரிக்கப்பட்ட மருந்துகளில் நான்கு மருந்துகள் பயனற்றவை என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) ஆய்வு மூலம் நிரூபித்துள்ளன.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்- ரெமாடெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர் / ரிடோனாவிர் மற்றும் இன்டர்ஃபெரோன் (Remdesivir, Hydroxychloroquine, Lopinavir and Interferon regimens) ஆகியவை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிக்கிசையின் போது சிறிதளவு கூட முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. PTI-யின் தகவலின் படி, உலக சுகாதார அமைப்பு இன்று தனது ஆறு மாத கால ஒருங்கிணைந்த மருத்துவ அறிவியல் பரிசோதனையின் முடிவுகளை அறிவித்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், கோவிட் -19 சிகிச்சையைப் பற்றிய ஒரு பெரிய அளவிலான, உலகளாவிய ஆய்வில், ரீமாசிவிர் மருந்து தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு குறைந்த தாக்கத்தை (Effect) ஏற்படுத்தியது என்பதற்கு ‘உறுதியான சான்றுகள்’ கிடைத்தன இது பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோய்வாய்ப்பட்டபோது இந்த மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்துகளை பரிசோதிப்பதன் நோக்கம், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் தற்போது கிடைக்கும் மருந்துகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதாகும். கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்த சிறப்பு சூழ்நிலைகளில் மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தை அமெரிக்கா வினையூக்கியுள்ளது. கூடுதலாக, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் லென்ட்ரே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் பற்றிய WHO ஆய்வின் முடிவுகள் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் அதே திசையில் உள்ளன என்று கூறினார். கோவிட் -19 சிகிச்சையில் ரெமடெசிவிர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று WHO-ன் ஆய்வில் இருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் வெளிவந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here