இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிரபல வாரிசு நடிகை!

சரத்குமாரின் மகள் வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு போடா போடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி அதனைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்கார், மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அந்தப்படத்துக்கு கண்ணாமூச்சி என பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் வரலட்சுமியே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here