வட்டி முதலையான போலி டத்தோ கைது

வட்டி முதலைகளுடன் கடனைத் தீர்ப்பது தொடர்பான வழக்கில் மூத்த புக்கிட் அமான் காவல்துறை அதிகாரியாக மாறுவேடமிட்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் ‘டத்தோ என்பவரருடன் மேலும் ஒருவர்   வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அக்., 4 இல் 40 வயதான தொழிலதிபர் ஒருவர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவர் வணிக நோக்கங்களுக்காக ஆலோங்கிடமிருந்து வெ.200,000 கடன் பெற்றுருந்தார். மேலும் இயக்க கட்டுப்பாட்டு உத்தரவு (MCO ) கால்த்திலிருந்தே   பாதிக்கப்பட்டவர்  ஆலோங் வழி அடிக்கடி அச்சுறுத்தப்பட்டார் என்று அவர் போலீஸ் அதிகாரி அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாரி நிக் எசானியின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் பின்னர் புக்கிட் அமானில்  மூத்த காவல்துறை அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திய டத்தோவைச் சந்தித்தார், மேலும் சந்தேக நபர் முன்னாள் கடன் முதலையுடன் கடனைத் தீர்க்கும் வகையில்  பேசினார்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொண்டார், அவருடைய கடன் திருப்பிச் செலுத்துதல் அனைத்தும் அவர் வழியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் தனது கடனைத் தீர்ப்பதற்காக வெ. 60,000 ஐ சந்தேக நபரிடம் ஒப்படைத்தார்,

ஆலோங்கிற்கு அவர் கொடுத்த கடன் குறைந்தபாடில்லை. அது இன்னும் நிலுவையில் உள்ளது,  சந்தேகத்தின் பேரில் அவர் போலீஸ் அறிக்கையைப் பதிவு செய்தார்.

விசாரணையில் சிலாங்கூர் , கோலாலம்பூர் வட்டாரத்தில் மோசடி சம்பந்தப்பட்ட நான்கு குற்றப் பதிவுகள் டத்தோ என்பவர்  மீதும்  அவ்ர் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனத்தின் மீதும் இருப்பதாகக்கண்டறியப்பட்டது, மற்ற சந்தேக நபர் ரகசிய கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர், பணம் வழங்கு சட்டம் 1952 இன் பிரிவு 5 (2), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 ,தண்டனைச் சட்டத்தின் பிரிவு 170 ஆகியவற்றின் படி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here