கமல் திடீரென மகாபாரதம் பேசுவது ஏன்? ஜெயகுமார் பேட்டி!

நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பத்திலிருந்து திமுக மற்றும் அதிமுகவை மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக அதிமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் அதற்கு அதிமுகவினர் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் அவ்வப்போது இடையில் அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகிறார்.

சமீபத்தில் கூட அவர் மகாபாரதம் பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் பற்றி கமலஹாசன் பேசியது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தேர்தல் வருவதால் “பிக் பாஸ்” மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை பெற வேடம் போடுகிறார் கமல்ஹாசன். அவர் மாற்றி, மாற்றி பேசுபவர். கமல் என்ன பேசுறார் என்று யாருக்கும் புரியாது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here