தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது

டாமான்சாரா போலீசார் 21 வயது உள்நாட்டு ஆடவரை காவல் நிலைய வளாகத்திலேயே கைது செய்தனர்.

கோவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஆடவர் கையில் வெள்ளை நிற பட்டை அணியப்பட்டிருந்தது.

அவரை விசாரித்தபோது தான் போலீஸ் புகாரை வழங்க வந்ததாகவும் அதே வேளை தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.


அந்த ஆடவர் கையில் அணிந்திருந்த கேகேஎம் வெள்ளை நிற கைப்பட்டையை மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்ததார். அதனை அறிந்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.

அவரின் அலட்சிய போக்கு மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பது ஆகியவற்றிக்காக அவர் மீது செக்‌ஷன் 29B கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போவதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் எசானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here