நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

மோடி பொது மக்களிடம் உரை

பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் முயற்சியால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதாக அப்போது அவர் கூறினார்.

இந்தியாவில் 10 லட்சம் பேரில் 5 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதே நேரம் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும் வரை பொது மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி,அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், முதலில் குறைந்த கொரோனா தொற்று பின்பு அதிகரித்ததையும் தனது உரையில் சுட்டிக் காட்டினார். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பல்வேறு விதமான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளில் சில இறுதிக்கட்ட பரிசோதனையில் இருப்பதாக அவர் கூறினார். அன்றாட வாழ்க்கை நடைமுறையை மீண்டும் வேகப்படுத்தவும், தங்களது கடமைகளை நிறைவேற்றவும் பொதுமக்கள் அதிக அளவு வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த பண்டிகைக் காலம் மெல்ல மெல்ல சந்தைகளை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் செல்லும் காட்சிகளை அதிக அளவில் காண முடிவதாகக் கூறிய பிரதமர் மோடி, கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார். ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா வைரஸ் இருந்து கொண்டிருக்கும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here