சீன கும்பலால் நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் விபச்சார அழைப்பு மையங்களை அமைக்க உதவிய ஒருவரை கைது செய்ததில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 138 பேரைக் கைது செய்ய போலீசாருக்கு வாய்ப்பாக இருந்தது.
மத்திய காவல்துறை சிஐடி இயக்குனர் கமிஷனர் டத்தோ ஹுசிர் முகமது, சனிக்கிழமையிலிருந்து சீனர்களால் நடத்தப்படும் 12 அழைப்பு மையங்களை போலீசார் முற்றுகை இட்ட பின்னர் பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 55 பேர் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும், மீதமுள்ளவர்கள் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுவர்.
எடி கண்ணா என்று அழைக்கப்படும் சந்தேகநபர் , அலெக்ஸ் கோ லியோங் யியோங் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு சந்தேக நபர் மலேசியாவில் தங்களது தளத்தை அமைப்பதில் கால் செண்டர் நடத்துர்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது இவர்களின் லாஜிஸ்டிக் தேவைகளை ஆண்கள் பூர்த்தி செய்ததாக அவர் கூறினார்.
கொள்ளை தொடர்பான முந்தைய கிரிமினல் பதிவு வைத்திருக்கும் எடி, போகாவின் கீழ் 21 நாட்கள்தடித்து வைக்கபடுவதாகவும், மேலும் அவரது காவலை 38 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் ஹுசிர் கூறினார்.
கோ , அவருடன் இணைக்கப்பட்ட பிற அழைப்பு மையங்களுக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வருவகிறது.
பிரபலங்கள், அரசியல்வாதிகள் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற கூற்றுககள் உண்மையா என்பதை அறியவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஹுசிர் கூறினார்.
சீன சட்டவிரோத சிண்டிகேட்டுகள் மலேசியாவிற்கு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என்ன, ஏன் செல்கின்றன என்று கேட்டதற்கு, ஹுசிர், தங்கள் நாட்டில் இத்தகைய சிண்டிகேட்டுகளுக்கு எதிராக சீனாவின் கடுமையான நடவடிக்கைகளும் மலேசியாவில் உள்ள நம்பகமான மல்டிமீடியா வசதிகளுமே காரணிகளாக உள்ளன என்றார்.