லைகா நிறுவனத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கமல் நடிக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ்.

இந்நிறுவனத்தின் தமிழக தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மார்ட்டின்.

இவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

லைகா தயாரிக்கும் படங்கள் தொடர்பில் பொருளாதார ரீதியான பலன்களை எதிர்பார்த்து இவர் காட்டிய சலுகைகளால் நிறுவனத்துக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்கும் நேரத்தில், இன்னொரு பக்கம் நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்கிற திடுக்கிடும் குற்றச்சாட்டு நடமாடுகிறது.

எனக்கு இணக்கமாக நடந்து கொள்ளவில்லையெனில் வேலை இருக்காது என்று சொல்லி மிரட்டியதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் வெகுண்ட பெண்கள், நேரடியாக இலண்டனில் உள்ள தலைமையகத்தில் புகார் செய்துவிட்டார்களாம்.

செய்தியறிந்த நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன், அவர் மீது கடுங்கோபங் கொண்டிருக்கிறாராம்.

மார்ட்டின் இப்போது இலண்டனில் இருந்தாலும் சுபாஸ்கரனிடம் சிக்கிவிடக் கூடாது என்று தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தமிழின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமொன்றில் நடந்திருக்கும் இந்தச் சிக்கல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here