தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். என்னதான் திரையுலகில் உச்ச நடிகராக இருந்தாலும் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியே இருப்பார்.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதோடு சரி வேறு எந்த சினிமா நிகழ்ச்சிகளில் அஜித் தலை காட்டுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். தன்னுடைய பிள்ளைகளை வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இந்த ஆண்டே பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது தன்னுடைய குழந்தைகளை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து தான் பள்ளிக்கு அனுப்ப உள்ளதாக அஜித் முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பேரிடர் காலத்தில் இதுவும் நல்ல முடிவு தான். தற்போது குழந்தைகளின் நலன் தான் முக்கியம் என கருத்து கூறி வருகின்றனர்.