சூரியனால் பூமிக்கு ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வருகிற 2022, 2030, மற்றும் 2040 களில் சூரியனால் உலகம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப் போவதாக விஞ்னிகள் எச்சரித்துள்ளனர்.சர்வதேச வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளில் சிலர் சமீபத்தில் இங்கிலாந்தில் ஒன்றுகூடி சூரியன் பற்றிய தங்களது ஆய்வறிக்களை சமர்ப்பித்துள்ளனர்.அதில் சூரியனால் பூமிக்கு சில ஆபத்துகள் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளனர்.

பொதுவாக சூரியனின் சுழற்சி 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். அப்போது சூரியனில் இருந்து காந்த சக்தி பரவுவது, கதிர் வீச்சின் தன்மை வலுவிழப்பது, கரும்புள்ளிகள் உருவாவது எனப் பல மாற்றங்கள் நிகழும். 90 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாற்றத்தில் சிலவை தலை கீழாக நடக்கும்.அந்த வகையில் வருகிற 2040-ம் ஆண்டில் சூரியன் தனது உதிக்கும் பணியை குறைத்துக் கொள்ளும் என்கிறார்கள்.

கடந்த 17-ம் நூற்றாண்டு இறுதியில் இப்படித்தான் சூரியன் தன் பணியை குறைத்து கொண்டதாம். அது போல வரும் 2040- ல் சூரியக் கஹிர் வீச்சு குறையும். பூமியில் வெப்பம் அதிகரிக்கும். கடும் குளிர், பனி பரவும் என்கிறார்கள் இதனிடையே சூரியனில் பூமியைவிட பெரிதான கரும் புள்ளி

ஒன்று உருவாகியுள்ளதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கரும்புள்ளிக்கு ‘சைக்கிள் 25’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தக் கரும்புள்ளி வருகிற 2022-ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள செயற்கைக் கோள்கள் சேதமடையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here