6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை?

பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுமியின் உடலானது பாதி எரிந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் தாண்டாப் பகுதியில் கடந்த புதன்கிழமை பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடலை பஞ்சாப் காவல்துறையினர் கைப்பற்றினர். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஜலல்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரீத் சிங் மற்றும் அவரது தாத்தாவான சுர்ஜித் சிங் ஆகியோர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை ஒரு தினக்கூலி. அவர் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கடந்த புதன் கிழமை மதிய வேளையில் தனது குழந்தைக்கு பிஸ்கட் கொடுப்பதாகக் கூறி, சுப்ரீத் சிங் குழந்தையை தூக்கிச் சென்றதாகவும் அதன் பின்னர் அவள் வீடு திரும்ப வில்லை என்றும் இதனைத்தொடர்ந்து அவளது உடலானது பாதி எரியூட்டப்பட்ட நிலையில் சுப்ரீத் சிங்கின் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் கிடந்தது தெரிய வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை, படுகொலை, ஆதாரங்களை அழிக்க முற்படுதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். இச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் காவல் விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here