சசிகுமார் நடிக்கும் புதிய படம்

சசிகுமார் இப்போது எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றோடு புதிய படமொன்றில் நடிக்க தற்போது ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.

திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை கிஷோர் என்பவர் தயாரிக்கிறார்.

ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டனராம்.

ஆனால், சசிகுமார் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் படப்பிடிப்புகளை முடிக்க வேண்டியிருப்பதால் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயிருக்கிறதாம்.

நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here