நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

இனி வரும் காலங்களில் பண்டிகைகள் நிறைய வர உள்ளதால், பொது மக்கள் தனிமனித இடைவெளியுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு, அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், மிக கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை கூட இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகை கொண்டாடப்படவேண்டும் என்றார்.

மேலும், பண்டிகை காலங்களில் நாம் நக்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது உள்ளூர் பொருட்களையே அதிக அளவில் வாங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், இனி வரும் காலங்களில் பண்டிகைகள் நிறைய வர உள்ளதால், பொது மக்கள் தனிமனித இடைவெளியுடன் பண்டிகையை, பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்கலை கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here